அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு […]
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎஸ் தலைமை தாங்கிவருகிறார். மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்ட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒரு நன்மையையும் ஏற்படவில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 15 மாத காலமாக […]
சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து […]
உங்களுக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைவரை கைது செய்து பாருங்கள் என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, விழுப்புரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலியே சோதனையிடுவோம். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் […]