குற்றவியல் நடைமுறைச் சட்டம் IPC 145ன் கீழ் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய நிலையில், இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அதிமுக அலுவலக […]
கட்சி அலுவலகத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு மனுவில் ஓபிஎஸ் கோரியுள்ளார். அதிமுக அலுவலகம் தனி நபர் சொத்து அல்ல என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றதற்கு இடையில், அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக […]