அதானி வழக்கு: செபியே விசாரிக்கும்.. சிறப்பு புலனாய்வு குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பங்குச்சந்தையை அதானி குழுமம் முறைகேடாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது. அதாவது, அதானி நிறுவனம் தங்களது நிதி நிலையை மறைத்து, பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாக கூறியிருந்தது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. இதனை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் வரை எடுத்து சென்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]