இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பங்குச்சந்தையை அதானி குழுமம் முறைகேடாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது. அதாவது, அதானி நிறுவனம் தங்களது நிதி நிலையை மறைத்து, பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாக கூறியிருந்தது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. இதனை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் வரை எடுத்து சென்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
அதானி தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகப் பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவருமான அதானி இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகப் பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த நன்கொடை தொகையை அதானி பவுண்டேஷன் நிர்வகிக்கும் என்றும், மருத்துவம், கல்வி,திறன் பயிற்சி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் என்றும் […]
அதானி பவர் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,645 கோடியாக அதிகரித்துள்ளது. அதானி பவர் லிமிடெட்,ஒரு இந்திய ஆற்றல் நிறுவனமாகும்.இது இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும்.அதானி பவர் நிறுவனம் 12,450 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிலையில்,அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ. 13.13 கோடியாக இருந்த நிலையில்,கடந்த மார்ச் காலாண்டில் பல மடங்கு அதிகரித்து லாபம் ரூ.4,645.47 கோடியாக […]
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய இரண்டு டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. ஏலத்தில் அதானி நிறுவனம்: இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வியாபாரியான அதானி நிறுவனம் மட்டுமே 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்றது. அதைப்போல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்ற அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தை விட அதிக […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள அதானிக்கு சொந்தமான சோலார் மின் நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் வீரராகவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மின் நிலையம் 4 ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் சூரிய மின் ஒளியை உற்பத்தி செய்து வருகிறது. அதிகாரிகள் அதானி சோலார் மின்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தற்போது தான் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவன் ராமநாதபுர ஆட்சியராக நியமிக்கப்பட்டார் […]