கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தென்மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் மன்னார்காடு-அட்டபாடி செல்லும் சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ராட்சத மரம் சாய்ந்தது.மரம் விழுந்ததில் ஒரு பக்க சாலையே பெயர்ந்து சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் மன்னார்காடு போலீசார் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. […]