சென்னை:தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா,புதிதாக பால் பதனிடும் நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தற்போது தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர்:”தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா ஏற்படுத்தப்படும்,புதிதாக பால் பதனிடும் நிலையம் அமைக்கப்படும்.ரூ.4600 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாவது […]
சென்னை:மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து,பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான 21 ஏக்கரில் ரூ.114 கோடி மதிப்பில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் கட்டப்படவுள்ளது.