தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்ட நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில்,”அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் செயல்படும். எனவே,தங்கள் பகுதிகளில் உள்ள […]
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் செயல்படாமல் இருந்ததை போன்று அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டிருந்தது. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில்,அங்கன்வாடி மையங்களையும் செப்டம்பர் 1 முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,அதற்கான,வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, […]