எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வில் தாமதம்,பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டகாரணங்களால்,இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்,மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தலாம் […]