மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும்,இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]