Akhilesh Yadav: சட்டவிரோத சுரங்க வழக்கில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று (புதன்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2019 ஜனவரி 2-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! […]
உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். […]
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும், சமாஜ்வாதியும் இணைந்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வந்தது. 7 இடங்களைப் ராஷ்டிரிய லோக் தளத்திற்கு (ஆர்எல்டி) சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே இறுதி செய்துள்ளது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடனான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 […]
ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு எதிராகவும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியினை முதலில் ஒன்றிணைத்து முதல் ஆலோசனை கூட்டமே பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதே போல அடுத்தடுத்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திலும் […]
மெயின்பூரி மக்களவை தொகுதி மற்றும் ராம்பூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாடி முன்னிலை பெற்று வருகிறது. உத்திர பிரதச மாநிலத்தில் ராஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பின்னர் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெயின்பூரி மக்களவை தொகுதிக்கும், ராம்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கானின் தகுதி நீக்கம் ஆகிய காரணங்களுக்காக ராம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடை தேர்தல் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கபில் சிபல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே,காங்கிரஸ் தலைமை பொறுப்புகளில் இருந்து காந்தி குடும்பம் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்று கபில் கூறியிருந்த நிலையில்,தற்போது கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து,கபில் சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியின் […]
உதைத்தார் பிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சில பகுதிகளிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் உத்தர பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் ஏ.கே.சர்மா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும், பருவகால புயலால் ஹர்துவாகஞ்ச்-605 மெகாவாட் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்து போர்க்கால அடிப்படையில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். சர்மாவின் கருத்துக்கு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, அரசாங்கத்தின் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் தொடர்ந்து ஆளும் கட்சியான பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்கள் அனைத்தும் ஊழலின் கூடாரமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜக அரசின் சகிப்புத்தன்மை இல்லாத இந்தக் கொள்கைகள் […]
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ், தாம் வசித்த அரசு பங்களாவை முழுவதுமாக காலி செய்து விட்டு வெளியேறினார். அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் அரசு வழங்கிய பங்களாக்களிலேயே வசித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களை அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து முலாயம் சிங் யாதவும், அகிலேஷ் யாதவும், லக்னோவில் தாங்கள் தங்கி இருந்த அரசு […]