17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது. முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் 1876-ல் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. பின், 1903-2004ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் 2004-2005 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி குழுவினர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணியில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை […]
அகரம் அகழாய்வில் மூன்றாவது முறையாக 8 அடி கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அகரம், கீழடி, மணலூர், கொந்தகை உள்ளிட்ட சில இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுடுமண், காதணிகள், மண்பானைகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பதாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது 15 சுடுமண் உறைகளுடன் கூடிய உறைகிணறும், 8 அடி நீளமுள்ள ஒரு உறைகிணறும் […]
தமிழ்நாட்டில் கீழடி, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி 30 ஆம் தேதி நிறைவடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாட்டில் கீழடி, அகரம், கொந்தகை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள் அனைத்தும் வரும் 30 ஆம் தேதி நிறைவடையும் என தொழில்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்தார்.