இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், மேலும் […]
3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில், அவர்கள் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். […]
பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபம் அகதிகள் […]
இலங்கையில் இருந்து மேலும் 7 பேர் தனுஷ்கோடி வருகை. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், அந்த நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். […]
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றும் படகு மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 14 பேரில் 12 பேர் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பேர் படகோட்டிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரும் இலங்கையிலுள்ள திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், படகோட்டிகள் இருவரும் மன்னாரை […]
தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ் பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், சிறு, குறு […]
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தற்போது வரை கென்யாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த 4 இலட்சத்துக்கும் அதிகமான அகதிகள் இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கென்யா நாட்டில் தற்போது கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கென்யாவில் 390க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அகதிகள் உள்ள […]