உயர்தர ஸ்மார்ட்வாட்ச் மாற்று வயர்லேஸ் ஏர்பட்ஸ் தயாரிப்பாளரான ஃபயர்-போல்ட் (Fire Blot), புதிய ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஃபயர்-போல்ட் லுமோஸ் என்கிற ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,499 க்கு அறிமுகமானது. இப்போது ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சையும் ரூ.1,499 என்ற விலைக்கே அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் கூடிய மெட்டல் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதனால் ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் நிறுவனத்தின் மெட்டல் எடிசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]