யானை தாக்கி விவசாயி பலி..!

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவாரம் சாலைத் தெருவைச் சேர்ந்த தென்னந்தோப்பு காவலாளி சேகர், இரவு சாக்குலுத்துமெட்டு பகுதியிலுள்ள தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.

காலை அவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்தபோது, தோப்பில் யானை மிதித்து இறந்துகிடந்தது தெரியவந்தது.

மேலும் அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களையும் யானை சேதப்படுத்திச் சென்றிருந்தது.

அப்பகுதியில் சுற்றிவரும் மக்னா யானை ஒன்று ஏற்கனவே 5 பேரை கொன்றுள்ளதாகக் கூறும் பொதுமக்கள், உடனடியாக யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.