கொரோன காரணமாக 2020 மற்றும் 2021ல் எளிமையாக கொண்டாடப்பட்ட உலக புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. சாமுண்டா தேவி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனின் மரணத்திற்குப் பிறகு, நகரம் மைசூர் என்ற பெயரைப் பெற்ற தாகவும் வரலாறுகள் கூறுகின்றன. மேலும் இந்த 10ம் நாள் தசரா(விஜயதஷ்மி) கொண்டாட்டங்களின் போது பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கண்கவர் ஊர்வலம் நடைபெறுகிறது. மைசூர் தசரா-2022-ஐ கொண்டாட குடியரசுத் […]
மைசூரு பல்கலைக்கழகத்தில் பயின்ற பாடங்களில் அதிக அளவு மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மைசூரு பல்கலைக்கழகத்தில் தற்போது 101 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பட்டங்களை வழங்கியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த சைத்ரா நாராயண் என்ற மாணவி பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை அடைந்துள்ளார். கர்நாடகா மாநிலம் உத்தரகண்டா மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற பகுதிக்கு […]
பல்வேறு மாநில அரசு கொவைட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் தற்போது மைசூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே அம்மாநில முதல்வர் மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சிகள்,திரையரங்குகள்,மற்றும் பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் எடியூரப்பா ரத்து செய்த நிலையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அம்மாநிலத்தில் உயர்ந்துள்ள நிலையில் மைசூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.