கன்னியாகுமரி: நாளை நிவாரண நிதி வழங்கப்படும் – ஆட்சியர் அறிவிப்பு!

Kanyakumari Rains

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1,000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்தது. அதாவது, பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் வெள்ள … Read more

மழை பாதிப்பு.. தென்மாவட்ட மக்களை உறுதியாக காப்போம் – முதலமைச்சர் உரை

mk stalin

கோவையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற நிலையில், மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய … Read more

மிக்ஜாம் புயல்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

mk stalin

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. “மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.  மீட்புப் … Read more

வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்..! பதிலடி கொடுத்த சென்னை மேயர்..!

mayorpriya

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழை பாதிப்பை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணா நகரில் … Read more

புயல் பாதிப்புகளை கையாள அரசுக்கு தெரியவில்லை – சசிகலா

கடந்த 2 நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை … Read more

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? – அண்ணாமலை

annamalai

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ.  மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை பாதிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் நிவாரணம் விநியோகம்..!

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணம் விநியோகம்.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்து இருந்த நிலையில், நேற்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் … Read more

இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். மேலும் அவர் பேசுகையில், கால்பந்து வீராங்கனை … Read more

தவறான நிர்வாகம், பொய்கள் இதுதான் திமுக! – அண்ணாமலை

இதயம் இல்லாத திமுக அரசு “நன்றாக வேலை செய்துள்ளோம்” என்று தன் முதுகில் தட்டிக் கொள்கிறது என அண்ணாமலை ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மழை வெள்ள பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் வீடியோ ஒன்றை பதிவிட்டு, திமுக அரசு பொய் சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“தவறான நிர்வாகம் & பொய்கள் -இதுவே திமுக!” மழைக்கு முன் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் சாமானிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு … Read more

#Breaking:மழை பாதிப்பு – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் சில சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் மழை பாதிப்பு,எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தலைமைச் செயலாளர் இறையன்பு,மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.