Tag: மழை பாதிப்பு

கன்னியாகுமரி: நாளை நிவாரண நிதி வழங்கப்படும் – ஆட்சியர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1,000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்தது. அதாவது, பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் வெள்ள […]

#Kanyakumari 4 Min Read
Kanyakumari Rains

மழை பாதிப்பு.. தென்மாவட்ட மக்களை உறுதியாக காப்போம் – முதலமைச்சர் உரை

கோவையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற நிலையில், மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய […]

Makkaludan Mudhalvar 5 Min Read
mk stalin

மிக்ஜாம் புயல்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. “மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.  மீட்புப் […]

Cyclone Michaung 9 Min Read
mk stalin

வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்..! பதிலடி கொடுத்த சென்னை மேயர்..!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழை பாதிப்பை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணா நகரில் […]

#Priya 6 Min Read
mayorpriya

புயல் பாதிப்புகளை கையாள அரசுக்கு தெரியவில்லை – சசிகலா

கடந்த 2 நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை […]

#DMK 4 Min Read

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? – அண்ணாமலை

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ.  மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை பாதிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான […]

#Annamalai 5 Min Read
annamalai

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் நிவாரணம் விநியோகம்..!

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணம் விநியோகம்.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்து இருந்த நிலையில், நேற்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் […]

#Rain 3 Min Read
Default Image

இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். மேலும் அவர் பேசுகையில், கால்பந்து வீராங்கனை […]

- 2 Min Read
Default Image

தவறான நிர்வாகம், பொய்கள் இதுதான் திமுக! – அண்ணாமலை

இதயம் இல்லாத திமுக அரசு “நன்றாக வேலை செய்துள்ளோம்” என்று தன் முதுகில் தட்டிக் கொள்கிறது என அண்ணாமலை ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மழை வெள்ள பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் வீடியோ ஒன்றை பதிவிட்டு, திமுக அரசு பொய் சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“தவறான நிர்வாகம் & பொய்கள் -இதுவே திமுக!” மழைக்கு முன் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் சாமானிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு […]

#Annamalai 2 Min Read
Default Image

#Breaking:மழை பாதிப்பு – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் சில சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் மழை பாதிப்பு,எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தலைமைச் செயலாளர் இறையன்பு,மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  

#CMMKStalin 2 Min Read
Default Image

இதற்காவது தமிழக அரசு ஏதாவது செய்யுமா? – டிடிவி

கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அப்போது அமைக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு என்ன ஆயிற்று? கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சென்னை, காஞ்சிப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக அரசின் […]

TTV Dhinakaran 4 Min Read
Default Image

மாணவர்கள் குஷி…இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி:கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக,தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பெய்த கனமழையில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு […]

heavy rains 3 Min Read
Default Image

“உரலுக்கு ஒரு பக்கம் இடி;மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி”-தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய கோரிக்கை!

மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது,மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மழை நீரில் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை […]

#DMDK 7 Min Read
Default Image

“அதிகரித்த சேதம்;கூடுதல் இழப்பீடு தர வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் !

தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட  பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல […]

#PMK 10 Min Read
Default Image

#Breaking:லீவு விட்டாச்சு…இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?-இங்கே பார்க்கவும்!

தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கும்,நான்கு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, […]

heavy rains 3 Min Read
Default Image

சென்னை வாசிகளே…இந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை!

சென்னை:கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விவரத்தை கீழே காண்போம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.சென்னையைப் பொறுத்த வரை,கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக ஒரே மாதத்தில் சென்னையில் 1000mm மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று தெரிவித்தார். இதனால்,குடியிருப்புகள் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும்,சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டு வருகின்றன. […]

heavy rains 6 Min Read
Default Image

#BREAKING : மழை பாதிப்பு – மத்திய அரசிடம் ரூ 4.626 கோடி கோரிக்கை..!

மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ரூ.4626.80 கோடி கேட்டு தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ரூ.4626.80 கோடி கேட்டு தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில்,  தற்காலிக சீரமைப்புக்கு ரூ. 1070.92 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்கு ரூ.3554.88 கோடியும் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 மாதங்களில் உருவான காற்றழுத்த […]

#TNGovt 4 Min Read
Default Image

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் – மத்திய குழு!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் வட கிழக்கு பருவ மழை குறித்த பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை […]

- 3 Min Read
Default Image

“அம்மாவின் அரசு எப்படி திறம்பட செயலாற்றியதோ!திமுக அரசும் அவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- இபிஎஸ்!

தமிழகம்:திமுக அரசு வெள்ள நிவாரண உதவிகளை உடனே வழங்கிட வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக 5,000/- ரூபாயை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]

- 17 Min Read
Default Image

இந்த மாவட்டத்தில் இன்று 7 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை!

காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக, சாலைகள்,பள்ளிகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதனால்,மழை பாதிப்பை பொறுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்டத்தில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு […]

#Rain 3 Min Read
Default Image