மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட பொதும்பு கிராம மக்கள் நேற்று கலெக்டர் வீரராகவராவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பொதும்பு கிராமத்தில் 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு கிழக்குபுறமும், மேற்குபுறமும் என 2 பக்கமும் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் இருந்து எங்கள் கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் 150 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. இப்போது இந்த 2 கண்மாய்களிலும், […]