Tag: பாமக

“30 ஆண்டுகளுக்கு பிறகும் 17.5% தான்: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”-பாமக நிறுவனர் ராமதாஸ் ..!

30 ஆண்டுகளுக்கு பிறகும் மத்திய அரசுப் பணியாளர்களில் வெறும் 17.50 விழுக்காட்டினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது பேரதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக, கடந்த காலங்களில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வு மூலம் அவற்றை ஓபிசி வகுப்பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். […]

#PMK 14 Min Read
Default Image

“இந்தியாவில் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..!

இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,நோபல் பரிசு அக்.11 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அதன்படி,நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதனையடுத்து,நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே,ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன்,மற்றும் […]

Dr S RAMADOSS 5 Min Read
Default Image

“உள்ளாட்சியில் பாமக வென்றால்,உங்கள் குறைகள் தீர்ந்து விடும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி..!

உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓட்டுப்போடுமாறு வாக்காளர்களுக்கு அக்கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலானது நாளை நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தேர்தலில் பாமகவுக்கு மக்கள் வாக்களிக்குமாறு அதன் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: நாளை வாக்குப்பதிவு: “உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களே! தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி […]

#PMK 16 Min Read
Default Image

பாமக தனித்து போட்டி – அரசியல் ரீதியாக இது பெரிய விஷயம் அல்ல – பாமக செய்தி தொடர்பாளர் பாலு

பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் விருப்பம் என பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தேர்தல் பையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாமக தனித்து போட்டி  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாமக கட்சியின் உயர்நிலை கூட்டம் நேற்று மாலை நடைபெறுகிறது . அக்கட்சி தலைவர் ஜி.கே […]

- 4 Min Read
Default Image

இந்திய அளவிலான சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கு,தமிழக அரசுக்கு  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படடு வருகிறது.அந்த வகையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் போலியோ சொட்டு மருத்து போடும் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நேற்று […]

#PMK 6 Min Read
Default Image

நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் இணைந்தார்

சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கும் ரஞ்சித், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். 1993-ம் ஆண்டு வெளியான ‘பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ரஞ்சித்,கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், அதிமுக வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார் . பல ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த […]

ranjith 2 Min Read
Default Image

பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நீரை பெற நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்..!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இயலாமையால், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்திருப்பதால் கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி […]

#PMK 7 Min Read
Default Image