Palanivel Thiyagarajan – உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவதை தடை செய்தது . மேலும் , இதுவரை எந்தெந்த கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி இம்மாதம் தேர்தல் ஆணையத்தில் மார்ச் 6 (நாளை) பதில் அளிக்க வேண்டும் என்றும், அதனை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் நவீன தகவல் தொழில்நுட்ப உலகின் சிற்பி கலைஞர் கருணாநிதி தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் ஐடி துறை உருவாக்கப்பட்டது. அவரது காலம் எப்படி ஐடி துறைக்கு பொற்காலமாக இருந்ததோ, அதே போல் திராவிட […]
2021இல் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது நிதித்துறை பொறுப்பானது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக தமிழக நிதித்துறையை திறம்பட கையாண்டு வந்தார் அமைச்சர் பி.டி.ஆர். இப்படியான சூழலில் கடந்த மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு பிடிஆர் வகித்து வந்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுக்கப்பட்டது. இதற்கு பின்னணியில் அப்போது வெளியான ஒரு ஆடியோ இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டது. அதாவது, அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. – என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மதுரையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அதிமுக எம்.எல்.ஏக்களான […]
கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள் என பழனிவேல் தியாகராஜன் பேட்டி. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள். ஆம் நான் கர்ப்பிணிகளின் உடல்நலனில் அக்கறை கொண்ட அமைச்சர்; இது போன்ற […]
மத்திய அரசு எல்லா திட்டத்திற்கும் பிரதான் மந்திரி திட்டம் என பெயர் வைத்து கொள்கிறது . ஆனால் அதற்கான நிதியில் பெரும்பகுதியை மாநில அரசு தான் கொடுக்கிறது. பெயர் மட்டும் மத்திய அரசு பெயரில். என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்து இருந்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தனர். அதில்,’ சதீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுதாக கட்டிமுடிக்கப்பட்டதையும், அதே […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ,தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ,தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
பணவீக்கமானது மற்ற மாநிலங்களில் 7 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் அது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கடனை குறைத்துள்ளோம். என பல்வேறு நிதி நிலைமையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் நிதிநிலையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் பல்வேரு முக்கிய நிதி அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. அதில்,, ‘ தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒத்துழைப்பு […]
இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை, எனது செருப்புக்கு சமமில்லை என தெரிவித்திருந்ததற்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அரசியலில் கடுமையான கருத்து மோதல்கள் இருக்கலாம்.ஆனால் அது அநாகரிகமாக,கண்ணியக்குறைவாக இருக்கக்கூடாது. மிகச்சிறந்த அறிவாளியும், நிர்வாகியுமான நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை எனது […]
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் பிடிஆர் அவர்களின் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் அவர்கள் வருகை புரிந்தார். அப்போது […]
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்கள் என ஜோதிமணி எம்.பி ட்வீட். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் அவர்கள் வருகை புரிந்தார். அப்போது அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின் பாஜகவினர் […]
பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்து, காரின் மேல் செருப்பு வீச்சு. ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவரது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த […]
தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது என தமிழக நிதியமைச்சர் விளக்கம். விலைவாசி உயர்வு, எரிபொருள் மீதான வரி உள்ளிட்டவை குறித்து மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு அவர்கள் கூறினார்கள். நவம்பர் 2021 […]
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது,கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை எனவும், இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.மேலும்,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைத்து மக்களை சிரமத்திலிருந்து மீட்க வேண்டும் என்று பிரதமர் […]
காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டபேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி […]
நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். ஆறு வழிச் சாலை: கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நான்கு வழி சாலையாக உள்ள சாலையை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இதற்கு 135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 60% ஆக […]
நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதில், சுய உதவிக்குழு, விவசாய பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடியும், விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கவும், நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.