கன்னியாகுமரி: நாளை நிவாரண நிதி வழங்கப்படும் – ஆட்சியர் அறிவிப்பு!

Kanyakumari Rains

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1,000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்தது. அதாவது, பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் வெள்ள … Read more

ஆளுநர், அமித்ஷா அப்பா சொத்தை நாங்கள் கேட்கவில்லை.. தமிழிசைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி.!

Telangana Governor Tamilisai Soundarajan - Minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய முதலில் தமிழக அரசு சார்பில் 5000 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு சார்பில் 450 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய குழு தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த குழுவிடம் தமிழக அரசு சார்பில் தற்காலிக உடனடி நிவாரணமாக சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்திற்காக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயையும் கேட்கப்பட்டது. இந்நிலையில் … Read more

மிக்ஜாம் புயல்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

mk stalin

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. “மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.  மீட்புப் … Read more

செய்தியாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதல்வர்…!

செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.  சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனுக்கு கம்பி குத்தியதில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த நிலையில், அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ₹3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், செய்தியாளர் … Read more

ஓபிஎஸ் -ன் நல்லெண்ணத்திற்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இலங்கைக்கு நிதியுதவி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உயிர் காக்கும் மருந்து உள்ளிட்டவை … Read more

தமிழகத்தில் பருவமழை பாதிப்பு:மத்தியக் குழு இன்று முதல் ஆய்வு!

தமிழகம்:மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று முதல் ஆய்வு செய்யவுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் அவ்வப்போது மிக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமா,சென்னை, காஞ்சிபுரம், கடலூர் திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம்,ரூ.2,629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை … Read more

ரூ.15 லட்சம்..காவல்துறை+தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கி-கருணாஸ் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 15 லட்சத் தொகையை கருணாஸ் வழங்கி உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் அதிதீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் மின்னல் வேகமாக பரவி வரும் தொற்றை தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், சமூக இடைவெளியை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டு தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருந்த போதும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.124 பேர் தமிழகத்தில் வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாதிப்பு … Read more