Tag: நிதியுதவி

பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்.. நிதியுதவி வேண்டும்.! டிடிவி கோரிக்கை.!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கட்சியின் தலைவருமான டிடிவி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், தனது கட்சி வளர்ச்சிக்காக நிதி கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில், நீங்கள் (ஆதரவாளர்கள்) என் மீது கொண்டுள்ள அன்பும், நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பும் அவ்வளவு அற்புதமானது. எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு அன்புகலந்த கண்டிப்பான […]

#AMMK 5 Min Read
AMMK Leader TTV Dhinakaran

மிக்ஜாம் புயல் பாதிப்பு: தொழிலதிபராக முன் வந்து நிதி வழங்கிய சூரி.!

மிக்ஜாம்புயல் சென்னையைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக நிதியுதவி அளித்து வருகின்றனர். முன்னதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த லிஸ்டில் சமீபத்திய நடிகர் சூரி இணைந்துள்ளார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு (சிஎம்பிஆர்எஃப்) ரூ.10 […]

Latest Cinema News 4 Min Read
soori

மாணவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம், நாளை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, நாளை வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் […]

aravind kejriwal 2 Min Read
Default Image

கடலூர் வெடி விபத்து – முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…!

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள […]

#MKStalin 2 Min Read
Default Image

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துனருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பேருந்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் பெருமாள் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்.  சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசு பேருந்தில் மேல்மருவத்தூர் அருகே பேருந்து நடத்துனர் மற்றும் அதில் பயணித்த பயணி ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்ட பயணி மது போதையில் இருந்த நிலையில் அவர் நடத்துனர் பெருமாளை தாக்கியுள்ளார். இதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மேல்மருவத்தூர் அரசு […]

#MKStalin 3 Min Read
Default Image

#BREAKING : இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து […]

#MKStalin 5 Min Read
Default Image

#BREAKING : தேர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…!

தேர்விபத்தில் உயிரிழந்த இளைஞர் தீப ராஜன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.  நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் தேரின் சக்கரத்திற்கு முட்டுக்கட்டை வைத்த போது, சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், […]

#MKStalin 3 Min Read
Default Image

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000 நிதியுதவி – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது […]

#PMK 11 Min Read
Default Image

#Breaking:உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி;மனைவிக்கு அரசுப்பணி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:இரவு நேர ரோந்து பணியின்போது பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி,அவரது மனைவிக்கு அரசுப்பணி  வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து தலைமைக் காவலர் சரவணன் என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்கள் இருவரும் […]

- 3 Min Read
Default Image

#Breaking:பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்,விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை உள்ளிட்ட பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும்,இந்த உதவித்தொகையப் பெற மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இத்திட்டத்தில் பயனடையும் மாணவ – மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது […]

#School 2 Min Read
Default Image

“தமிழக அரசே…அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்குக” – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

புதுச்சேரியில் மழை – வெள்ள பாதிப்பு குறைவுதான்,ஆனால்,அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதைப்போல,தமிழக அரசும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும் என்றும்,நோய் பரவலில் இருந்து கடலூர் மாவட்ட மக்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; […]

- 11 Min Read
Default Image

மழை பாதிப்பு…”ஏக்கருக்கு ரூ.30,000;பாதிக்கப்பட்டவர்ளுக்கு ரூ.5,000″ – தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

தமிழகம்:மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது,விவசாயிகள் இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மழையால் சேதமடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மழை பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் நிதியுதவி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக […]

#Farmers 11 Min Read
Default Image

#BREAKING : உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு மேலும் ரூ.15 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்த நிலையில், மேலும் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குமாறு  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா  உயிரிழந்துள்ளார். மேலும், பெரியமரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு போக்குவரத்து […]

#MKStalin 3 Min Read
Default Image

மரம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர்…!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில், காவலர் கவிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா  உயிரிழந்துள்ளார். மேலும், பெரியமரம் […]

#MKStalin 3 Min Read
Default Image

இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா…!

நடிகர் சூர்யா அவர்கள் தமிழக முதல்வர் முன்னிலையில்  பழங்குடியின இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது தயாரிப்பு நிறுவனம் (2D) சார்பில் ரூ.1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் […]

#MKStalin 3 Min Read
Default Image

“தனித்துப்போட்டி..நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை” – சீமான்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்றவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இது ஒரு போதும் வீண் போகாது: “என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!கடந்த சட்டமன்ற தேர்தல் 2021, […]

- 16 Min Read
Default Image

ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி உதவி நிறுத்தம்…!

ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி உதவியை உலக வங்கி நிறுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்பதாக மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு வீரர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் […]

#Afghanistan 3 Min Read
Default Image

சீனா நிதியிலா? ராஜீவ் அறக்கட்டளை??? ராகுலுக்கு பாஜக நறுக்!

காங்கிரளின் சி  ராஜிவ் அறக்கட்டளைக்கு தற்போது வரை  சீனா நிதி அளித்து வருவதாக  பா.ஜக பகிரங்க  குற்றம்சாட்டி உள்ளது. லடாக் எல்லையில், இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, பா.ஜக.,வும், காங்கிரசும் உள்நாட்டில் வார்த்தை போரில் ஈடுபட்டதை நாடே பார்த்தது. லடாக் தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு மீதும், பிரதமர் தும், காங்கிரஸ் எம்.பியும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான  ராகுல் காந்தி, தனது  ‘டுவிட்டர் பக்கத்தில்’ தினமும் இது குறித்து குற்றம் சுமத்தி […]

காங்கிரஸ் 5 Min Read
Default Image

கொரோனா வைரஸ் விவகாரம்… பிரதமரின் நிவாரண நிதிக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிதியுதவி…

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்கள்  தங்களால் இயன்ற […]

கொரோனா 3 Min Read
Default Image

கொரோனா தடுப்பு நிதியுதவி…. உண்டியல் சேமிப்பை வாரி வழங்கும் பால் மணம் மாறா பாலர்கள்…

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று பலரும் நிதியுதவி அளிக்க முன் வந்து நிதியுதவி அளித்தனர். இந்த உன்னத பணியில் தங்கள் பங்கும் வேண்டும் என்று கருதிய சின்னஞ்சிறு சிறுவர் சிறுமியர், தங்கள் சிறுசேமிப்பு பணத்தை பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியுதவிக்கு அனுப்ப துவங்கியுள்ளனர். இதில், குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தை சேர்ந்த  அங்லேஷ்வர் நகரை சேர்ந்த […]

கொரோனா 4 Min Read
Default Image