மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில். புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தற்போது வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரம்பத்தூர் […]
Aamir Khan:மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே பேரழிவைச் சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவித்தனர். நேற்று காரப்பாக்கத்தில் வீடுகளில் தத்தளித்த நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டனர். விஷ்ணு விஷால் சென்னையில் வசிக்கும் நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சமீபத்தில் சென்னைக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. அவரது தாயார் சென்னையில் […]
கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிலைமை […]
டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஃபாா்முலா ரேஸிங் சா்க்யூட் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சா்க்யூட் பந்தயங்களான ‘பாா்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘இந்தியன் ரேசிங் லீக்’ காா் பந்தயங்கள் இம்மாதம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் இரவுப் […]
‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் ‘மிக்ஜாம்’புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு திசையில் புயல் நகர்ந்து நாளை முற்பகல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையிலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் […]
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை […]
மிக்ஜாம் எதிரொலியால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தீவிர புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் […]
சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் விலகி சென்றது தீவிர புயலான மிக்ஜாம் புயல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிக்ஜாம் புயல்: பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய […]
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டு கொண்டு வருகிறது. புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முதல் விடிவிடிய கனமழை பெய்து வருவதால் சென்னை பல்வேறு பகுதியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னையே மலையில் தத்தளித்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர […]
கடந்த 27 ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு சுமார் 8 கிமீ வேகத்தில் […]
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு விட்டு விட்டு மழை பெய்தது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் புயலாக வலுப்பெற உள்ளது. முன்னதாக மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் , கடந்த 6 மணி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கி, பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் நீண்டது. அதன் பிறகு தற்போது உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து […]
சென்னை உட்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சுற்றுவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.அதன்படி கண்ணமங்கலம், ரெட்டிபாளையம், புதுப்பேட்டை, காட்டுக்காநல்லூரில் ஆகிய இடங்களில் கன மழை […]
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வானிலை ஆய்வு […]
வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு […]
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு இடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது என காவல்துறை தலைமை அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 35 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரு சக்கர வாகனங்களை ஏலம் விடுவது குறித்த அறிவிப்பை காவல்துறை தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை, மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட 42 வாகனங்கள் (35 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரண்டு சக்கர […]