Tag: சூர்யா

ஆஹா! 500 கோடி பட்ஜெட்டில் சூர்யாவின் புதுப்படம்?

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு பிரமாண்டமாக 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவும் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள தனது […]

janhvi kapoor 5 Min Read
suriya

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா!

ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. ISPLT10 கிரிக்கெட் என்றால் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆகும். 10 ஓவர்கள் வைத்து நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ISPLT10 கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் […]

ISPL T10 4 Min Read
actor suriya

ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! அமீர் அறிக்கை!

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து ‘மௌனம் பேசியதே’ படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் இதே தினத்தில் (டிசம்பர் 13)-ஆம் தேதி தான் 2002-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நந்தா துரைராஜ், அஞ்சு மகேந்திரன், நேஹா பென்ட்சே, விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் […]

#MounamPesiyadhe 7 Min Read
Suriya and Ameer

தேடி வந்த ஆங்கில பட வாய்ப்பு! வெற்றிமாறன் பதிலுக்கு காத்திருக்கும் சூர்யா?

நடிகர் சூர்யா தற்போது படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக தன்னுடைய 43-வது திரைப்படமான சுதாகொங்கரா இயக்கும் “சூர்யா 43” படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்பும் […]

#Vaadivaasal 6 Min Read
Suriya vetrimaaran

நடிகர் சூர்யாவை பார்த்து வியந்து போன பாலிவுட் பிரபலம்.!

பாலிவுட் நடிகர் பாபி தியோல் தற்போது ‘அனிமல்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் மூழ்கியுள்ளார். ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அப்ரார் ஹக் என்ற முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்போது கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சூர்யா நடிக்கும் படத்தில் தனது பங்கு குறித்து மனம் திறந்து பேசினார்.  சமீபத்தில் ஒரு முன்னணி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த பாபி தியோல், தற்போது சூர்யாவுடன் கங்குவா என்ற படத்தில் நடித்து […]

Bobby Deol 5 Min Read
suirya - kanguva - Bobby Deol

ஆசையை காட்டி ஏமாத்திட்டாங்க! வேதனையில் நடிகை தமன்னா காதலன்?

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தமன்னாவை காதலிக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இவர் தமன்னாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளிவந்த பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இவர் தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இப்படி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நடிகர் விஜய் வர்மா பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது தன்னுடைய கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து […]

Latest Cinema News 5 Min Read
tamanna vijay varma

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

பருத்திவீரன் படம் இந்த அளவிற்கு பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என்று தெரியாமல் அமீர் பற்றி ஞானவேல் ராஜா பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், மௌனம் பேசியதே படத்தில் இருந்தே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கு இடையே பிரச்சனை இருப்பதாக செய்திகள் உலாவி கொண்டு இருந்தது. ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

Ameer 6 Min Read
ameer and suriya

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான  சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து […]

Chennai Corporation 5 Min Read
suriya karthi

விஜயகாந்த் உடல்நிலை…விஜய்க்கு முன் முந்திய சூர்யா.! கோடானகோடி வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்..

அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என சூர்யா ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், தளபதி விஜய் ஏன் இன்னும் விஜயகாந்த் குறித்து நலம் விசாரிக்கவில்லை என்று கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியானது. […]

#Surya 9 Min Read
Vijayakanth Vijay Surya

சிவகுமார், சூர்யா மீது வழக்கு போட எனக்கு விருப்பமேயில்ல! இயக்குனர் அமீர் பேச்சு!

பருத்திவீரன் பட சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த பிரச்சனை முடிந்த பாடு இல்லை. தன்னிடம் இருந்து பருத்திவீரன் படத்தை மிரட்டி வாங்கிவிட்டதாகவும், தனக்கு ஞானவேல் தயாரிப்பிலிருந்த்து பணத்தை பெற்று தரும்படியும் அமீர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார். அந்த வழக்கும் இன்னும் நிலுவையில் தான் இருந்து வருகிறது. இதனையடுத்து, ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Latest Cinema News 6 Min Read
ameer about sivakumar and suriya

பாலிவுட் வரை வெடித்த ரோலக்ஸ் தாக்கம்! ‘அனிமல்’ படத்தில் அசத்தல் என்ட்ரி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோ நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 450 கோடி வசூல் செய்திருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அவர் வருவது படத்தில் கடைசி சில நிமிடங்கள் என்றாலும் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். […]

#Animal 5 Min Read
AnimalMovie rolex reference

அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?

தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து  வரும் கங்குவா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க […]

Bobby Deol 5 Min Read
kanguva suriya

விபத்தில் காயமடைந்த சூர்யாவின் தற்போதைய நிலைமை என்ன? வெளியானது வீடியோ…

சமீபத்தில், கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஓய்வுக்காக முன்பை புறப்பட்டு இருக்கிறார். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அதுபோல், இந்த படத்தில் வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை ஐம்பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐம்பூதங்களிலும் […]

#Surya 6 Min Read
Kanguva Shoot

தந்தை வில்லனாக மிரட்ட…ஹீரோவாக கலக்க வரும் விஜய் சேதுபதி மகன்!

தமிழ் சினிமாவில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஒரு கலக்கு கலக்கி அனைவரும் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில். அவருடைய மகன் சூர்யா சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாக விருக்கும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு, ‘பீனிக்ஸ் வீழான்’ […]

Latest Cinema News 5 Min Read
Vijay Sethupathi Son

ஐயோ.! கங்குவா படப்பிடிப்பில் விபத்து…நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா!

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் நடிகர் சூர்யா காயமடைந்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான […]

#Surya 5 Min Read
Suriya - Kanguva

வணங்கான் ஓவர்.! ‘அருவா’- வை கையில் எடுக்கும் சூர்யா.! மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “சூர்யா 42” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் படத்திலிருந்து சூர்யா சமீபத்தில் விலகினார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா – பாலா இந்த படத்தின் மூலம் இணைந்ததால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், திடீரென படத்திலிருந்து சூர்யா விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பல […]

#Hari 4 Min Read
Default Image

அதெல்லாம் பொய் நம்பாதீங்க… சுதா கொங்கரா கூறிய அதிர்ச்சி செய்தி.! அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்.!

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா – இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும்,  இவர்கள் இருவரும் இணையும் அந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. அத்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் கதை டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் எனவும் அதனை தான் இயக்குனர் சுதா கொங்கரா படமாக இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதையும் […]

- 3 Min Read
Default Image

ரத்தன் டாடாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.? சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் அடுத்த வெறித்தனம் விரைவில்….

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கோரூர் ராமசாமியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி தரமான படத்தை கொடுத்த இவர்களது கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,  டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் […]

- 4 Min Read
Default Image

சூர்யாவின் வணங்கான் வெகு விரைவில்… மாஸ் அப்டேட் கொடுத்து வாயடைத்த இயக்குனர் பாலா.!

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் “வணங்கான் “திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து படத்திற்கான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் வேலைகள் நடிக்கிறதா என்பது குறித்த தகவலும் கூட வெளியாகவில்லை. இதனால் இணையத்தில் சூர்யாவுக்கு – பாலாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் படப்பிடிப்பு நிறுத்தி […]

#Vanangaan 3 Min Read
Default Image

வாங்க சமைத்து சாப்பிடலாம்.! சூர்யா ஜோதிகாவுக்காக பிரியாணி செய்த மம்முட்டி.!

நடிகை ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது, கேரளாவின் எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜோதிகாவை பார்ப்பதற்காக சூர்யா வந்துள்ளாராம். பிறகு படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் கழித்துவிட்டு மம்மூட்டியுடன் மனம் விட்டு சூர்யா […]

Jyotika 3 Min Read
Default Image