சபரிமலையில் அமலான புதிய திட்டம்- பக்தர்கள் மகிழ்ச்சி..!

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து  தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 80,000-90,000 பக்தர்கள் வருகை  தருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 4 … Read more

இனிமேல் கட்சி கூட்டங்களில் இவர்கள் கலந்துகொள்ள கூடாது..! நீதிமன்றம் அதிரடி..!

அரசியல் கட்சிகளின் பேரணிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளவும், முழக்கமிடவும் தடைவிதிக்கப்படுவதாக கேரளா நீதிமன்றம் அறிவுறுத்தல்.  இன்று பல இடங்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு.  இந்த  சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில், கேரள நீதிமன்றம் இனிமேல் கட்சி கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்கள் கலந்துகொள்ள கூடாது என தெரிவித்துள்ளது. அதனபடி, கேரளாவில் ஆலப்புழாவில் நடந்த பாப்புலர் ஃபிராண்ட் பேரணியில் சிறுவர் ஒருவரை அவரது தந்தை தோளில் ஏற்றி வைத்திருந்த போது, அச்சிறுவன் … Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – உ.பி முதல்வர் வேண்டுகோள்!

உத்தரப் பிரதேச மாநிலம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முறையாக கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை பின்பற்றுமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கௌதம புத்தர் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 103 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,காசியாபாத் பகுதியில் புதிதாக 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹாப்பூர், மீரட், புலந்த்ஷாஹர் மற்றும் பாக்பத் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் கொரோனா பரவி … Read more

அதிர்ச்சி…1-6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் – WHO எச்சரிக்கை!

அமெரிக்கா,இங்கிலாந்து,ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகளால் கூறப்படுகிறது.இந்நிலையில்,இங்கிலாந்தில் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பாக 74  வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதேபோன்று,ஸ்பெயினில் மூன்று வழக்குகள் மற்றும் அயர்லாந்தில் ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பான … Read more

உக்ரைனில் இதுவரை 5 மில்லியன் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் தகவல்..!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையே போர் நிலவி வருகிறது. இந்நிலையில், ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் ஏறக்குறைய 5 மில்லியன் உக்ரைன் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள யுனிசெப் அமைப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன், உக்ரைனிலுள்ள 7.5 மில்லியன் குழந்தைகளில் 5 மில்லியன் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது வருத்தமளிப்பதாகவும், இது எனது 31 வருட மனிதாபிமான பணியில் பார்க்காத ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் படிக்கும் அறையில் இந்த புகைப்படங்களை வைத்திருங்கள்..!

குழந்தைகள் படிக்கும் அறையில் இந்த புகைப்படங்களை மாட்டி வைத்திருங்கள். இன்று படிக்கும் அறையில் வைக்கும் புகைப்படங்களை வைப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். படிக்கும் அறையில் புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு நீங்கள் வைக்கும் படங்கள், குழந்தையின் மனமும் அதற்கேற்ப படிப்பில் ஈடுபடும். குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களிலிருந்து மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு எந்த வகையான சூழலைக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல, அல்லது மிக … Read more

ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே..!-கைலாஷ் சத்யார்த்தி..!

ஆப்கன் குழந்தைகளும் நமது குழந்தைகளே என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். வன்முறை அபாயத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பல ஆண்டுகள் பணியாற்றியதற்காக 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சத்யார்த்தியை, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை அன்று எஸ்டிஜி வழக்கறிஞராக நியமித்தார். இந்நிலையில் கைலாஷ் சத்யார்த்தி தற்போது தெரிவித்துள்ளதாவது, தலிபான் ஆட்சியின் கீழ் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் … Read more

போதிய உணவின்றி ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகள் தவிப்பு…!

ஆப்கானிஸ்தானில் போதிய உணவின்றி 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போதிய அளவு உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது … Read more

சுவாச பிரச்சனை : மருத்துவமனையில் 60 குழந்தைகள் அனுமதி; 3 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே சுமார் 200 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல பகுதிகளிலும் தொடர்ந்து இது போன்று குழந்தைகள் சுவாசப் பிரச்சனை இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றால் குழந்தைகள் … Read more