நாடாளுமன்றத் தேர்தல்ளுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரசை மேலும் பலப்படுத்த இந்திய ஒற்றுமை நடைப்பயணமான பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2வது கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி, தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். ஆனால், அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுலுக்கு அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்படுவதாக காங்கிரஸ் […]
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக வேகப்படுத்தி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி […]
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை நடைபயணம் யாத்திரை வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது […]
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போது சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல் ” எனும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது . அதே போல அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. […]
அரசியல் சாசனத்துக்கு விரோதமாக மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் அரசியல் சாசன விரோத செயலை நிதி ஆயோக் தலைமை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார். 14வது நிதிக் குழுவை மிரட்டி, மாநில அரசுகளின் வரி வருவாயில் இருந்து திருட அனுமதிக்கும் வகையில், பிரதமர் மோடியே அரசியல் சாசனத்துக்கு […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது. இதில், குறிப்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிலும், இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அதனால், மிகுந்த […]
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக விளங்கும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் அதிகாரி அனில் மசி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான மறு தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. பில்கிஸ் பானு வழக்கு…கூடுதல் அவகாசம் கோரி மனு..! சண்டிகரில் உள்ள மொத்தம் என் 35 மாநகராட்சி இடங்களில் பாஜக 14 கவுன்சிலர்களை கொண்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து முறையை […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த 2022 செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023 ஜனவரி மாதம் காஷ்மீர், ஸ்ரீநகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையில் பாஜகவின் பிரிவினைவவாத மாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவம், வேலைவாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் முக்கிய நோக்கமாகக் […]
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தி தனது நீதியாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். வரும் ஜனவரி 14-ஆம் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி! வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை […]
ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்தர்பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் குன்னார் 12,750 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். வேட்பாளர் இறந்ததால் கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால், கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக அமைச்சர் சுரேந்திர சிங்கை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் […]
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனரான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்த இணைப்புக்கு பிறகு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ். ஷர்மிளா, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களுடன் காங்கிரஸில் […]
உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதியாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் (Pran Pratishtha) விழா வரும் ஜனவரி 22ஆம் தேதிநடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர்கள் மாதுரி தீட்சித், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : ரயில் […]
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 2024 ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) நடைபெற உள்ளது. இதற்கான முழு ஏற்பாடையும் ராமர் கோயிலை கட்டி முடித்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. அதன் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா பல்வேறு அரசியல் தலைவர்ளுக்கு ராமர் கோயில், பிரான் பிரதிஷ்டாவுக்கான அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி […]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..! அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், […]
இந்து கடவுள்களில் ஒருவராக இருக்கும் ஸ்ரீ ராமர் பிறந்த இடமாக உத்திரபிரதேச மாநிலம், அயோத்தி கருதப்படுகிறது. ராமர் பிறந்த ஊரில் அவருக்கு ஒரு பிரமாண்ட கோயில் கட்ட மத்திய பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான வேலைகளை முழுவீச்சில் ஆரம்பித்தது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் ஜனவரி மாதம் இதன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது வரும் ஜனவரி 22, 2024இல் ராமர் கோயில், பிரான் பிரதிஷ்டா (Pran Pratishtha) விழா வெகு கோலாகலமாக நடைபெற […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரை அவமதித்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது ஆளும்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்பிக்கள் ஒற்றுமையைக் காட்ட நாடாளுமன்றத்தில் பத்து நிமிடங்கள் நின்ற நிலையில் இருந்தனர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் […]
கடந்த புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இரண்டு பேர் மக்களவையில் குதித்து வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி கோஷமிட்டனர். அதே போல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கோஷமிட்டனர். இதனை அவர்களது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார் இப்படி இந்த வழக்கின் கீழ் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இருவர் குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அதனை எடிட் செய்து அதில் காங்கிரஸ் எம்பி […]
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் முடிவடைந்து இம்மாதம் 3ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. இதில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு முதலமைச்சராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றதை […]
ராஞ்சியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.300 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை (ஐடி) துறையினர் நடத்திய சோதனையின் போது ரூ.300 கோடி மீட்கப்பட்டதையடுத்து, ராஜ்யசபா உறுப்பினர் தீரஜ் சாஹுவிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது. காங்கிரஸ் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் அவினாஷ் பாண்டே ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இது அவருடைய கூட்டுக் குடும்பத்தின் கூட்டுத் தொழில். அந்த குடும்பம் 100 […]