கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளசாராயம் விற்ற பெண்ணை மதுவிலக்கு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் கள்ளசாராய விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவல் கிடைக்கப்பெற்ற பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரியாகவுண்டம்பட்டி அருகே கள்ளசாராயம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில், அவரது பெயர் செல்வி என்பதும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், 45 லிட்டர் கள்ளச்சாரயத்தையும் பறிமுதல் செய்தனர்.