அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தி உள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். அப்போது, பல உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த சமயத்தில் 2007-2008-ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் அப்போது ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் தற்போது விசாரணை நடத்தி உள்ளனர்.

கேள்விகளை கண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்.? – பிரியங்கா காந்தி

ஜனநாயகத்தில் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என பிரியங்கா காந்தி ட்வீட். 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களிடம் அமலாக்கத்துறை 3-வது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டது. இதற்க்கு எதிராக காங்கிரசார் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் கைது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து பிரியங்கா காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமரே இந்த MPக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள். பணவீக்கம், வேலை இல்லா திண்டாட்டம் குறித்த கேள்விகள், மக்களின் கேள்விகள்.

ஆனால் நீங்களோ பெண் MPக்களின் ஆடைகளை கிழித்து, அவர்களை தரையில் இழுத்து செல்வது கொடூரத்தின் உச்சம். ஜனநாயகத்தில் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளுக்கு செவி சாய்க்க வேண்டும். கேள்விகளை கண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்.?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

சோனியாகாந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு..!

நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் 3-வது நாளாக, அமலாக்கத்துறை சோனியகாந்தியிடம் நடத்திய விசாரணை நிறைவு. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு மாற்றியது தொடர்பாக எழுந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்பாட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் தொடர்ந்தது அப்போது அவர் அமலாக்க துறையின் முன் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்றும் ஆஜராகும் படி அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜரானார். சோனியா காந்தியிடம் இன்று நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவடைந்தது. சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு காங்கிரசார் நேற்று மற்றும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு : மூன்றாவது நாளாக ஆஜரானார் சோனியா காந்தி..!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான இன்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு மாற்றியது தொடர்பாக எழுந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்பாட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் தொடர்ந்தது அப்போது அவர் அமலாக்க துறையின் முன் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்றும் ஆஜராகும் படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் இன்றும் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார்.

நேற்று கடந்த வார விசாரணையின் போதும், நேற்று நடந்த விசாரணையின் போதும்  காங்கிரஸார் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இன்றும் காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உண்மை இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு எழுதியே தீரும் – ராகுல் காந்தி

போலீஸ் மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துத்தி எங்களை நீங்கள் கைது செய்தாலும் நீங்கள் எங்கள் குரலை நசுக்க முடியாது என ராகுல் காந்தி ட்வீட். 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது போலீசார், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சர்வாதிகாரத்தைப் பாருங்கள். அமைதி வழிப் போராட்டம் நடத்த இயலவில்லை, பணவீக்கம் குறித்தோ, வேலை இல்லா திண்டாட்டம் குறித்தோ விவாதிக்க முடியவில்லை. போலீஸ் மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துத்தி எங்களை நீங்கள் கைது செய்தாலும் நீங்கள் எங்கள் குரலை நசுக்க முடியாது. உண்மை இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு எழுதியே தீரும்.’ என பதிவிட்டுள்ளார்.

#BREAKING : டெல்லியில் ராகுல் காந்தி கைது..!

குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முற்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கைது. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி க்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றியபோது, முறைகேடாக பண பரிமாற்றம் செய்ததாக கூறி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி புகார் அளித்து இருந்தார்.

அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விசாரணை கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடைபெற்றது.  அப்போது நாடு முழுவதும் காங்கிரசார் பல இடஙக்ளில் தங்கள் எதிர்ப்பை காட்ட போராட்டம் நடத்தினர்.

அன்று, சுமார் 2 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் இன்று அமலாக்க துரையின் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார்.

சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி நிலையில், பேரணியாக சென்ற அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் குசியாராசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்வோம் என உறுதியாக இருந்ததையடுத்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி! போலீசார் அதிரடி..!

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக சென்ற நிலையில், போலீசார் அனைவரையும் கைது செய்துள்ளனர். 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி க்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றியபோது, முறைகேடாக பண பரிமாற்றம் செய்ததாக கூறி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி புகார் அளித்து இருந்தார்.

அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விசாரணை கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடைபெற்றது.  அப்போது நாடு முழுவதும் காங்கிரசார் பல இடஙக்ளில் தங்கள் எதிர்ப்பை காட்ட போராட்டம் நடத்தினர்.

அன்று, சுமார் 2 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் இன்று அமலாக்க துரையின் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார்.

சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி நிலையில், பேரணியாக சென்ற அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

மோடி அரசின் அமலாக்கத்துறைக்கெல்லாம் அஞ்சாமல் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கும் – ஜோதிமணி எம்.பி

jothimani MP

மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம் என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜோதிமணி எம்.பி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளோம். மோடி அரசு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்காக முன்பு தலைவர் ராகுல் காந்தி , இன்று அன்னை சோனியா காந்தி மீது அமலாக்கத் துறையை ஏவிவிட்டு விசாரணை என்ற பெயரில் அராஜகம் செய்கிறது.

அரிசி, பால்,தயிர்,பென்சில் , மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு என்று அனைத்திற்கும் கொடுமையான வரி விதிக்கும் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிராக ,காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இதனால் அமலாக்கத்துறையை ஏவி விட்டு காங்கிரஸ் கட்சியை அலைக்கழிக்கலாம் என்று மோடி அரசு நினைக்கிறது.

மோடி அரசின் அமலாக்கத்துறைக்கெல்லாம் அஞ்சாமல் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கும். மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை மிரட்டலுக்கு காங்கிரஸ் அடிபணியாது.! பா.சிதம்பரம் அதிரடி கருத்து.!

அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் என்றும் அடிபணியாது. – சோனியா காந்தியை அமலாக்க துறை விசாரணை செய்வதை எதிர்த்து பா.சிதம்பரம் கருத்து. 

நேஷனல் ஹெரால்டு வழக்கில்  பணமோசடி இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பு விசாரணையில் இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பா.சிதம்பரமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் கூறுகையில், ‘நேஷனல் ஹெரால்ட் பற்றிய கணக்கு விவரங்கள் முறையாக வருமான வரித்துறை முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் என்றும் அடிபணியாது.’ என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

காந்தி குடும்பம் களங்கமற்றது என்றால்,ஏன் கவலை? – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

ஊழலில் ஈடுபட்டவர்களை விசாரிப்பது புலனாய்வு அமைப்புகளின் கடமை என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து. 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், காந்தி குடும்பம் கழகம் அற்றது என்றால் ஏன் கவலை? ஊழலில் ஈடுபடவில்லை என்றால் எதற்கு இந்த கூச்சல்? ஊழலில் ஈடுபட்டவர்களை விசாரிப்பது புலனாய்வு அமைப்புகளின் கடமை என கருத்து தெரிவித்துள்ளார்.