கலைஞர் நூற்றாண்டு விழா: பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது!

கலைஞர் நூற்றாண்டு விழா: பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது!

pongal in govt school

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி (இன்று) பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்பட இருந்த இனிப்பு பொங்கல், கோடை விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாததால் அப்போது வழங்கப்படவில்லை. இதனால், இன்று அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube