சுஷாந்த் சிங்கை அவரது நாயின் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி…. உதவியாளர் அதிர்ச்சி தகவல்!

சுஷாந்த் சிங்கை அவரது நாயின் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி…. உதவியாளர் அதிர்ச்சி தகவல்!

Default Image

அவருடன் 24 மணிநேரமும் இருந்த எனக்கு தெரியும், அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை. அவரின் சொந்த நாய் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தான் கொலை செய்துள்ளார்கள் என சுஷாந்த் சிங்கின் உதவியாளர் அதிர்ச்சியான தகவலை கொடுத்துள்ளார்.

இன்று வரையிலும் மர்மம் தீராத கொலை வழக்குகளில் ஒன்றாக இருப்பது தான் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். சமூக வலைத்தளங்களில் இது குறித்து சர்ச்சையான கருத்துக்களும் பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நடிகராக இருந்தாலும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சுஷாந்த் சிங். இவர் தற்கொலை செய்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியதும் முழு இந்திய திரையுலகுமே சோகத்தில் ஆழ்ந்தது. ஆனால், இது தற்கொலையா அல்லது கொலையா என இன்னும் கண்டறியப்படவில்லை.

இவரது மரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவரது காதலி ரே சக்கரபூர்த்தி மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் உதவியாளரான அன்கிட் ஆச்சார்யா தற்பொழுது சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருடன் 24 மணிநேரமும் இருந்த தனக்கு அவர் எப்படி பட்டவர் என்பது நன்றாகவே தெரியும் என கூறிய அவர், சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சுஷாந்த் சடல புகைப்படத்தை தான் அடிக்கடி பார்த்துக்கொண்ட இருப்பதாக கூறிய அவர், சுஷாந்த் வளர்த்த நாயின் பெல்ட்டினை வைத்து தான் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்கள் என கூறியுள்ளார். ஏனென்றால் தற்கொலை செய்துகொண்டவர்கள் கழுத்தில் “U” வடிவ அடையாளம் தான் இருக்கும் ஆனால், சுஷாந்தின் கழுத்தில் “O” வடிவ அடையாளம் உள்ளது எனவும் தெரிவித்த அவர், தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு கண்கள் மற்றும் நாக்கு வெளியில் வந்து இருப்பதுடன் வாயில் நுரை இருக்கும் ஆனால், அது கூட சுஷாந்தின் சடலத்தில் இல்லை என கூறியுள்ளார். இவர் தற்பொழுது கூறியுள்ள இந்த கருத்தால் சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Join our channel google news Youtube