இன்று ‘இந்தியன் 2’ திரைப்பட அறிமுக வீடியோவை வெளியிடும் சூப்பர் ஸ்டார்!

இயக்குனர் ஷங்கர் தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் அதனை முன்னிட்டு இந்தியன் 2 படத்திற்கான புது க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று (நவம்பர் 3-ஆம் தேதி) வெளியாகும் படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில், இன்று வெளியாகவிருக்கும் இந்தியன் 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தான் இன்று மாலை (நவ 3) 5.30 மணிக்கு வெளியிடுகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் சினிமாவில் போட்டி இருந்தாலும் கூட இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அறிமுக வீடியோ எந்த மாதிரி இருக்க போகிறது என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அநேகமாக, அந்த வீடியோவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் அவர்களது கதாபாத்திரங்களை காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு படங்களில் இந்தியன் 2 படமும் ஒன்று. எனவே, இப்படி இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை ரஜினிகாந்தே வெளியிடவேண்டும் என்று கமல்ஹாசன் விரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு நாளை படத்திற்கான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.