பலவீனமடைந்த இந்திய பங்குச்சந்தை.! 1.5%க்கு மேல் லாபம் ஈட்டிய சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்..!

பலவீனமடைந்த இந்திய பங்குச்சந்தை.! 1.5%க்கு மேல் லாபம் ஈட்டிய சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்..!

Sensex

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இடையிடையே அவ்வப்போது ஏற்றமடைந்து இருந்தாலும் இந்த சரிவினால் ஏற்பட்ட நஷ்டமே அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளிலும் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது.

இன்று ஆரம்ப வர்த்தகத்தில், 65,021.29 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 219.39 புள்ளிகள் சரிந்து, 64,739.30 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 59.30  புள்ளிகள் சரிந்து 19,352.45 புள்ளிகளாக வர்த்தகமானது.

தற்போது வர்த்தக நாள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்செக்ஸ் 16.29 புள்ளிகள் சரிந்து, 64,942.40 புள்ளிகளாவும், நிஃப்டி 5.05 புள்ளிகள் சரிந்து, 19,406.70 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 1.67 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 83.51 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 194.00 அல்லது 2.84% குறைந்து ரூ.6,632 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் உள்ளது.

அதன்படி, சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (+1.92%), என்டிபிசி லிமிடெட் (+1.38%), ஆக்சிஸ் வங்கி லிமிடெட் (+1.17%), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (+1.11%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (-0.04%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (-0.10%), டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (-0.12%), பார்தி ஏர்டெல் லிமிடெட் (-0.22%) உள்ளிட்ட  நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube