போராடியவர்கள் மீது தடியடி- தமிழகம் முழுவதும் போராட்டம்

போராடியவர்கள் மீது தடியடி- தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்பு காவல்த்துறையினர் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ,பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவித்தனர்.

இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது.குறிப்பாக நாகை ,விருதுநகர்,நெல்லை ,தூத்துக்குடி ,தென்காசி  உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் காவல்த்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Join our channel google news Youtube