கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு மரபணு  பகுப்பாய்வு கூட்டம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment