டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை தட்டி சென்ற இளம் வீரர்.!
டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் முதன்முறையாக பட்டத்தை தட்டி சென்றார் இளம் வீரர் அல்காரஸ்.
7 முறை விம்பிள்டன் சாம்பியன் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் என டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த ஜோகோவிச் நேற்று அதிர்ச்சி தோல்வியை தழுவினார். லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஜோக்கோவிச் இளம் வீரருடன் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தார்.
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 36 வயதான ஜோகோவிச் 20 வயதான அல்காரஸ் எதிர் கொண்டார். பரபரப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் மாறி மாறி செட் கணக்கில் முன்னிலை வகுத்து வந்தனர். இதனால் ஆட்டம் 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்து, கடைசி செட் வரை சென்றது. இறுதியில் இளம் வீரர் அல்காரஸ் முதன்முதலாக ஜோக்கோவிச்சை முதன்முதலாக வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்ற ஜோகோவிச் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியை வென்றது மூலம் இந்திய மதிப்பில் அல்காரஸுக்கு 25 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.