நேற்று 40 நிமிடம் , முன்தினம் 3 மணி நேரம் தான் தூங்கினேன்.! இந்திய வீரர் குமுறல்.!

Default Image
  • நேற்றைய  இரண்டாம் நாள்  போட்டி முடிந்த பிறகு பேசிய இஷாந்த் சர்மா நான் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.
  • தலைவலி , தலைசுற்றல், சோர்வு ஆகியவற்றிலிருந்து எவ்வளவு சீக்கிரமாக மீண்டு வருகிறானோ அவ்வளவு தூரம் என்னால் பந்து வீச முடியும்  என கவலையுடன் கூறினார்.

நேற்றைய  இரண்டாம் நாள்  போட்டி முடிந்த பிறகு பேசிய இஷாந்த் சர்மா , தனது உடல்நிலை குறித்து பேசினார். அப்போது நான் மகிழ்ச்சியாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக சரியாக தூங்கவில்லை. இன்று  கூட சிரமப்பட்டேன். அணி நிறுவனம் கேட்டுக் கொண்டதால்தான் விளையாடினேன்.

விளையாட மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எனது உடல்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை. நேற்று இரவு 40 நிமிடம் , முன்தினம் 3 மணி நேரம் தான் தூங்கினேன். தலைவலி , தலைசுற்றல், சோர்வு ஆகியவற்றிலிருந்து எவ்வளவு சீக்கிரமாக மீண்டு வருகிறானோ அவ்வளவு தூரம் என்னால் பந்து வீச முடியும்  என கவலையுடன் கூறினார்.

இந்தியா , நியூசிலாந்திற்கு இடையில்  முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர்  நியூசிலாந்து அணியில் இறங்கிய டாம் லாதம் 11 ரன்னில் கேட்சை கொடுத்தார்.  நிதானமாக விளையாடிய டாம் ப்ளண்டெல் 30 ரன்னில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் போல்ட் ஆனார்.பின்னர் ராஸ் டெய்லர் , கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

நிதானமாக விளையாடி வந்த  ராஸ் டெய்லர் 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தார்.நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் அடித்தனர். இதனால் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.

இப்போட்டியில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா குறைந்த ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார்.இன்று மூன்றாம்நாள் ஆட்டம் தொடங்கி உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்