WWT20 : இந்திய மகளிர் அணி படைத்த புதிய ரெகார்ட்! அரை இறுதிக்கும் இதுதான் ஒரே வழி!
இந்திய மகளிர் அணி நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக இந்த போட்டியானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது.
மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. முன்னதாக நியூஸிலாந்து அணியுடன் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்திய அணி இந்த முறை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வி அடைவார்கள் என்று விமர்சனம் வைக்கப்பட்டது.
ஆனால், அந்த விமர்சனத்திற்கு இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் மகளிர் அணியை வென்றதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் மகளிர் அணியை அதிக முறை தோற்கடித்த அணியாக இந்திய அணி இருந்து வருகிறது.
இந்திய ஆடவர் அணி, மகளிர் அணி என இரண்டையும் சேர்த்து மொத்தம் 8 முறை பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதியிருக்கிறது. அதில், நேற்று நடைபெற்ற போட்டியையும் சேர்த்து 6 முறை இந்திய அணி வெற்றி பெற்றுருக்கிறது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை அதிகமுறை வென்ற அணியாக இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும், இந்தியா மகளிர் அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் தற்போது மீதம் இருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றி பெரும் கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.
இந்திய மகளிர் அணிக்கு, அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணியுடன் போட்டிகள் இருப்பதால் அது சற்று கடினமான பாதையாக இந்திய மகளிர் அணிக்கு அமைந்திருக்கும். எனினும், இந்திய மகளிர் அணியின் மீது இந்திய ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு என்பது குறையாமல் இருந்து வருகிறது.