Riyadh Football : மாஸாக எண்ட்ரி கொடுத்த WWE சூப்பர்ஸ்டார் `தி அண்டர்டேக்கர்’ .. அடக்கமுடியாமல் சிரித்த ரொனால்டோ ..!

Published by
அகில் R

ரியாத் 2024 கிளப் போட்டி நேற்றுடன் முடிவடைந்து உள்ளது. நேற்று நடந்த கிளப்பின் இறுதி போட்டியில் அல்-ஹிலால் மற்றும் அல்-நாசர் அணியை எதிர்கொண்டது.  இதில் அல்-நாசர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் அல் -ஹிலால் அணி வெற்றி பெற்றது.

#IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..!

இந்த ஆட்டம் தொடங்கும் முன் மைதானம் திடீரென இருட்டாக மாறியது, 5 நொடி அமைதிக்கு பிறகு மாஸாக எண்ட்ரி கொடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்  WWE சூப்பர்ஸ்டாரான `தி அண்டர்டேக்கர்’.  அவருக்கென இருக்கும் BGM மைதானத்தில் ஒளிபரப்பட்டது, அவருக்கென உள்ள ஸ்லொவ் வாக் (Slow Walk) என்ட்ரியை கொடுத்து, ரியாத் கோப்பையை கையில் ஏந்தியவாறு மைதானத்தில் நடந்து வந்தார்.

மைதானத்தில் இருந்த அவரின் ரசிகர்களும், கால்பந்து ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  அல் -நாசர் அணிக்காக விளையாடிய கால்பந்து நட்சித்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதை கண்டவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதன் விளையாட்டு தொடங்கியது, விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டம் முழுவதும் அல் -ஹிலால் அணி தங்களது பக்கம் தக்க வைத்திருந்தது.  எந்த ஒரு தருணத்திலும் எதிரணியை கோல் அடிக்க விடாமல் பாதுகாத்தனர். ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் அல் – ஹிலால் வீரரான செர்ஜஜ் மிலின்கோவிச்-சாவிக் முதல் கோலை அடித்தட்டு அசத்தினார்.

அதன் பின் ஆட்டத்தின் 30 வது நிமிடத்தில் அல்-ஹிலால் அணி வீரர் சலீம் அல்-தவ்சாரி அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அசத்தினர். அதன் பிறகு எந்த ஒரு வீரராலும் கோல் அடிக்க முடியாமல் ஆட்டம் நிறைவு பெற்றது. இதனால் அல் -ஹிலால் அணி 2-0 என்ற கணக்கில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ரியாத் கோப்பையும் வென்றது.

 

Recent Posts

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

9 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

10 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

10 hours ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

11 hours ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

12 hours ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

12 hours ago