காலமானார் WWE ஜாம்பவான் ரே மிஸ்டீரியோ… இறந்தவர் யார்? குழம்பிய ரசிகர்கள்.!

இச்செய்தி மல்யுத்தத்தில் பிரபலமான WWE ரே மிஸ்டீரியோ ஜூனியர் பற்றியது அல்ல. இது ரே மிஸ்டீரியோவின் மாமா பற்றியது.

Rey Misterio Sr

மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்து எதுவும்  தெரிவிக்கப்படவில்லை.

இருந்தாலும், ரே மிஸ்டீரியோவின் மறைவிற்கு, உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதில் தான் பெரிய குழப்பமே ஏற்ப்பட்டுள்ளது. அதாவது, WWE-ல் குள்ளமாக இருந்தாலும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடிய ரே மிஸ்டீரியோவுக்கு வயது 50 தான் ஆகிறது. சொல்லப்போனால், இவர் தான் 90-ஸ் கிஸ்ட்களுக்கு மிகவும் பேவரட் என்றே சொல்லலாம்.

தற்பொழுது, மறைந்த ரே மிஸ்டீரியோ சீனியருக்கு வயது 66 ஆகும். ‘மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ்’ என்ற உண்மையான பெயரை கொண்ட ரே மிஸ்டீரியோ சீனியரின் மரணத்தை அவரது குடும்பத்தினரே உறுதிப்படுத்தியுள்ளனர். இவர், அதிகாரப்பூர்வமாக WWE மல்யுத்தத்தை 2009-இல் நிறுத்திவிட்டார். இவரை, WWE போட்டிகளில் மாமா என்று அழைக்கப்படுவார்.

இதில் மற்றொரு டிவிஸ்ட் என்னெவென்றால், இப்பொது மறைந்த ரே மிஸ்டீரியோ சீனியர், 90-ஸ் பிடிச்ச ரே மிஸ்டீரியோவின் உண்னமயான “மாமா” ஆவார். அட ஆமாங்க… அவர்கள் இருவரும் குடும்பத்தினராம், முக முடி மற்றும் WWE போட்டிக்காக தங்களது பெயரை அவ்வாறு மாற்றி கொண்டனர். 90-ஸ்க்கு பிடிச்ச ரே மிஸ்டீரியோவின் உண்மையான பெயர் ‘ஆஸ்கார் குட்டிரெஸ் ரூபியோ’.

இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக மாஸ்க் அணிந்து இருப்பதால், மறைந்த ரே மிஸ்டீரியோ சீனியரை, 90-ஸ்  பேவரைட் ‘ரே மிஸ்டீரியோ’ தானா? என்று குழப்பமடைந்தனர். 90-ஸ் கிஸ்ட்களுக்கு பிடித்தமான ரே மிஸ்டீரியோ உயிரோட தான் இருக்கிறார். இப்பொது இந்த செய்தி குறிப்பில் அந்த குழப்பம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரே மிஸ்டீரியோ Sr

ரே மிஸ்டீரியோ Sr (சீனியர்) மெக்ஸிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தான் ‘WWE’ எனப்படும் வர்த்தக மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். இவர்1955-ல் மெக்ஸிகோவின் டிஜுவானாவில் பிறந்தார், மல்யுத்தத்திற்கு நுழைவதற்கு முன்பு குத்துச்சண்டையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்