டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா,நேற்று நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 57 கிலோ இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் கல்ஜான் ரகாட்டை 12-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வேறு எந்த வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.
மேலும்,இது தொடர்பாக,”ஆசிய சாம்பியன்ஷிப் 2022 இல் எனது நாட்டிற்காக தொடர்ந்து மூன்றாவது தங்கத்தை வென்றுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.எனது பயிற்சியாளர்கள்,எனது குடும்பத்தினர், WFI, எனது நண்பர்கள், எனது நலம் விரும்பிகள் மற்றும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழு ஆதரவு குழு, அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை”,என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே,பிப்ரவரியில் நடந்த டான் கோலோவ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இதனிடையே,ரவி 2020 ஆம் ஆண்டு டெல்லியிலும், கடந்த ஆண்டு அல்மாட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…