உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய பெண் அன்ஷு மாலிக்…!
மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
நார்வேயின் ஒஸ்லோவில் நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த அரையிறுதி போட்டியின் 57 கிலோ பிரிவில் ஆசிய சாம்பியனான(20 வயதான) இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் பங்கேற்று,ஜூனியர் ஐரோப்பிய சாம்பியன் சோலோமியா வின்னிக்கை 11-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இதன்மூலம்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றை அன்ஷு படைத்துள்ளார்.
உலக அளவில் நான்கு இந்திய மல்யுத்த வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.(கீதா போகட் (2012), பபிதா போகட் (2012), பூஜா தண்டா (2018) மற்றும் வினேஷ் போகட் (2019) – வெண்கலம் வென்றனர்).
இந்நிலையில்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு அன்ஷு தகுதி பெற்றுள்ளார்.இதில் வெற்றி பெற்றால்,2010 இல் சுஷில் குமாருக்குப் பிறகு உலக சாம்பியனான இரண்டாவது இந்திய மல்யுத்த வீரராகம் வாய்ப்பு அன்ஷுவுக்கு உள்ளது.
????????????
Anshu Malik becomes the first Indian woman to reach the gold-medal final of the World Wrestling Championships! ????
Here’s her reaction after the historic feat ????
????️: @wrestling pic.twitter.com/URX9MNL8sK
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) October 6, 2021
மேலும்,இது தொடர்பாக அன்ஷு கூறுகையில்:”இது மிகவும் திருப்தி அளிக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டோக்கியோ விளையாட்டில் என்னால் செய்ய முடியாததை நான் இங்கு செய்தேன். எனது கடைசி போட்டியாக நினைத்து ஒவ்வொரு போட்டியிலும் நான் போராடினேன்.
இதற்காக நான் கடுமையாகப் பயிற்சி பெற்றேன், நான் எனது 100 சதவிகிதத்தை கொடுக்க விரும்பினேன்,எனது கடைசி போட்டியைப் போல இறுதிப் போட்டியில் போராடுவேன்,” என்று அவர் கூறினார்.
இதனையடுத்து,அன்ஷூ மாலிக்,இன்று மாலை நடைபெறும் இறுதிச் சுற்றில், 2016 ஒலிம்பிக் சாம்பியனான ஹெலன் மாரூலிஸை எதிர்கொள்கிறார்.