WOW.! 6 பந்தில் 6 சிக்சர் விளாசி வரலாற்றில் இடம் பிடித்த நியூசிலாந்தின் முதல் வீரர்.!

Default Image
  • நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கான்டர்பெர்ரி கிங்ஸ் – நார்தர்ன் நைட்ஸ் (Northern Knights) அணிகள் மோதின. 
  • ஒரே ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார், நியூசிலாந்தின் முதல் வீரர் லியோ கார்ட்டர்.

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் 2019-20 கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற போட்டியில் கான்டர்பெர்ரி கிங்ஸ் மற்றும் நார்தர்ன் நைட்ஸ் (Northern Knights) அணிகள் மோதின. அதில் டாஸ் வென்று நார்தர்ன் நைட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக ஆடி 219 ரன்கள் குவித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய கான்டர்பெர்ரி கிங்ஸ் அணி 18.5 ஓவரில் 222 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். அதில் அதிரடியாக ஆடிய கான்டர்பெர்ரி அணியின் இடதுகை பேட்ஸ்மேன் லியோ கார்ட்டர் எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆண்டன் டேவ்சிச் வீசிய ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார்.

இதன்மூலம் ஒரே ஓவரில் 6 பந்துகளையும் 6 சிக்ஸர் விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும், நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இவரது அதிரடியால் கான்டர்பெர்ரி கிங்ஸ் 220 ரன்களை சேசிங் செய்தது. லியோ 29 பந்தில் 70 ரன்கள் விளாசினார்.

இதற்குமுன் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங், தென்அப்பிரிக்காவின் கிப்ஸ் ஆகியோர் சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். மேலும் ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ், ராஸ் ஒயிட்லி, ஆப்கானிஸ்தானின் ஹர்சதுல்லா சேசாய் ஆகியோரும் சாதனைப் படைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்