1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் உலகின் மிக பெரிய ஸ்டேடியம்.! சும்மா கெத்தா இருக்கு.!
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள உலகிலேயே மிக பிரமாண்ட மோதிரா கிரிக்கெட் மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அப்போது அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணிக்கிறார்.
#MoteraStadium
Ahmedabad, India ????????
Seating capacity of more than 1,10,000
World’s largest #Cricket stadium pic.twitter.com/FKUhhS0HK5— BCCI (@BCCI) February 18, 2020
#MoteraStadium gearing up for #NamasteTrump !!
Witness the world’s biggest cricket stadium host the oldest and biggest democracies of the world!
Watch all the action only on @DDNewslive @DDNewsHindi @DDIndialive @PBNS_India @shashidigital @Chatty111Prasad pic.twitter.com/q2Wevmd72Z— Meghna Dev (@DevMeghna) February 18, 2020
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள உலகிலேயே மிக பிரமாண்ட மோட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அந்த மைதானத்தில், நமஸ்தே டிரம்ப் எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த ஸ்டேடியம் தான் உலகிலேயே மிக பெரிய ஸ்டேடியம் என குறிப்பிடத்தக்கது.