உலக டூர் பேட்மிண்டன் தொடர்: சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட பி.வி சிந்து.!

- உலக டூர் பேட்மிண்டன் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
- கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து சீன வீராங்கனையை ஹி பிங்ஜியாவோவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தார்.
உலக டூர் பேட்மிண்டன் தொடரின் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இடம் பிடித்திருந்தார். நடப்பு சாம்பியனான பிவி சிந்து இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், நேற்று கடைசி போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-19, 21-19 என வெற்றி பெற்றார். முதல் செட்டில் சீன வீராங்கனை 11-6 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 18-9 என முன்னிலைப் பெற்றார். பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து தொடர்ச்சியாக 9 புள்ளிகள் பெற்று 18-18 என சமநிலைப் பெற்றார். அதன்பின் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து 2-வது செட்டில் பிவி சிந்து 7-3 எனவும், 11-6 எனவும் முன்னிலைப் பெற்றார். பின்னர் சீன வீராங்கனை 16-18 என நெருங்கி வந்தார். அதன்பின் பிவி சிந்து தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று 21-19 என 2-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்து வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025