டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு – ஜோகோவிச் உறுதி…!
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜோகோவிச் கடந்த வார இறுதியில் கோல்டன் ஸ்லாம் தகுதிக்கான மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்தார்.2021 ஆம் ஆண்டில் தனது ஆஸ்திரேலிய ஓபன்,பிரஞ்சு ஓபன் மற்றும் ரோலண்ட் கரோஸ் வெற்றிகளில் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
பல ஆண்டுகளாக,நான்கு ஸ்லாம்களையும் ஒரு ஒலிம்பிக் தங்கத்தையும் ஒரே ஆண்டில் எந்த வீரரும் வென்றதில்லை.ஆனால்,ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் 1988 இல் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே வீரர் ஆவார்.
முன்னதாக,தனது 20 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விம்பிள்டனை வென்ற பிறகு,டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது தனக்குத் தெரியாது என்று ஜோகோவிச் தெரிவித்தார்.
இந்நிலையில்,ஜோகோவிச் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தனது விமான பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ததாகவும், ஒலிம்பிக்கில் செர்பியா சார்பாக பங்கேற்பதில் பெருமைப்படுவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும்,இதுகுறித்து,ஜோகோவிச் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஒலிம்பிக் அரங்கில் பிரகாசமான பதக்கங்களுக்கான போட்டியில், எங்கள் தேசிய அணியில் சேருவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, செர்பியாவிற்கான விளையாட்டு எப்போதுமே ஒரு சிறப்பான மகிழ்ச்சியையும் உந்துதலையும் தருகிறது, நம் அனைவரையும் மகிழ்விக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்! போகலாம்.”, என்று ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு முன்னர்,கடந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் விளையாட்டுப் போட்டிகளில் ஜோகோவிச் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cannot disappoint my little friend Koujirou. I booked my flight for Tokyo and will proudly be joining #TeamSerbia for the Olympics. ???????? pic.twitter.com/23TmSdvc4x
— Novak Djokovic (@DjokerNole) July 15, 2021
С великим поносом се пакујем за Токио и придружујем нашој репрезентацији у борби за најсјајнија одличја на Олимпијским борилиштима. За мене је игра за Србију увек била посебна радост и мотивација и даћу све од себе да нас све обрадујем! Идемооо ????????
— Novak Djokovic (@DjokerNole) July 15, 2021