உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து..!
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில் அடுத்தாண்டு 2021 ஜனவரி மாத்த்தில் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக இப்போட்டியானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து இப்போட்டியை நடத்த ஆர்வம் காட்டிய நிலையில் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2024ம் ஆண்டுக்கான போட்டியை நியூசிலாந்தே நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.