விண்வெளிக்கு சென்றுவந்த உலகக்கோப்பை கால்பந்துகள்! ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்ட வீடியோ.!
ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன.
கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்துகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கத்தார் விமான சேவையின்மூலம் போட்டி நடக்கும் கத்தார் கால்பந்து மைதானத்துக்கே திரும்ப வந்துள்ளன.
இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், ஃபிஃபா உலககோப்பை மற்றும் கத்தார் விமானசேவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது. உலககோப்பை கால்பந்துகள் விண்வெளிக்கு கொண்டு சென்று பூமிக்கு திரும்ப, ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஸ்டார் லிங்க் இன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளது.
இந்த கிரகத்தின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிக்கான பெருமையுடைய கால்பந்து உலகக்கோப்பை தொடரின் கால்பந்துகள், ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஸ்டார் லிங்க் மூலம் பூமியை விட்டு விண்வெளிக்கு கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப வந்துள்ளது என்று ஸ்பேஸ்-எக்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Thanks to @FIFAWorldCup and @QatarAirways for entrusting SpaceX and the Starlink team to fly two World Cup balls to space and back! Learn more → https://t.co/dnpvBO7hqT https://t.co/tNJ94u97tp
— SpaceX (@SpaceX) December 12, 2022