உலகக்கோப்பை கால்பந்து திருவிழா.! 7-0 என பிரமாண்ட வெற்றியை பெற்ற ஸ்பெயின்.!
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் நேற்று கோஸ்டாரிகாவிற்கு எதிராக ஸ்பெயின் 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் தனது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-E வில் இடம்பெற்ற ஸ்பெயின் மற்றும் கோஸ்டாரிகா அணிகள் அல் துமாமா ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலாவது பாதியில் ஸ்பெயினின் டானி ஓல்மோ, மார்கோ அசென்சியோ மற்றும் ஃபெரான் டோரஸ் ஆகியோர் 3 கோல்களை அடித்தனர்.
இதனால் ஸ்பெயின் முதல் பாதியில் 3-0 என்று முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் கோஸ்டாரிகா அணி வீரர்களால் ஸ்பெயின் வீரர்களின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் டோரஸ் தனது இரண்டாவது கோலும், மாற்று வீரராக இறங்கிய கார்லோஸ் சோலர் ஒரு கோலும் அடித்தனர்.
முடிவில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. இதன்மூலம் ஸ்பெயின் உலகக்கோப்பையில் தனது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக பிரான்சில் நடைபெற்ற 1998 உலகக்கோப்பையில், ஸ்பெயின் அணி பல்கேரியாவிற்கு எதிராக 6-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.