உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ராஜினாமா.!
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து, கிரஹாம் ரீட் விலகியுள்ளார்.
2023 ஹாக்கி உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு பிறகு, இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா 9-வது இடத்தை பிடித்ததையடுத்து, கிரஹாம் தனது ராஜினாமாவை ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கியிடம் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் ரீட், 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக பதவியேற்று, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கியப் பங்காற்றினார்.
நான் தலைமையிலிருந்து விலகி அடுத்தவர்களுக்கு பதவியை ஒப்படைக்க வேண்டிய நேரமிது, இந்திய ஹாக்கி அணியுடன் பணியாற்றியது ஒரு மரியாதை மற்றும் எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கிரஹாம் ரீட் கூறினார். நான் இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து மகிழ்ந்தேன், மேலும் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று ரீட் கூறினார்.