செஸ் : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் உலகசெஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என்று FIDE இன்று அறிவித்துள்ளது.
இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் இளம் உலக சாம்பியனாகும் வாய்ப்பிற்காக மொத்தவிருக்கிறார். இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நவம்பர் 20 முதல் டிசம்பர் 15, வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு உலகம் முழுவதும் பல நாடுகள் விண்ணப்பங்களை அளித்தனர். அதில் இந்தியாவில் குஜராத், டெல்லி மற்றும் சென்னையில் நடத்துவதற்கு இந்தியா செஸ் சம்மேளனமும் முயற்சி செய்தனர். அதன் பின் சமீபத்தில் தமிழக அரசும் தனியாக உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு முயற்சி செய்தனர்.
ஆனால், FIDE தற்போது இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சிங்கப்பூரில் நடத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாத் ஆனந்தம், நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலகத்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், ஆனந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…